நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி,

நெல்லையில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை முயற்சி வழக்கு:

திருநெல்வேலி மாநகரம், கொக்கிரகுளம், கீழவீரராகவபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி (வயது 28) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது:

இதை தொடர்ந்து மேலப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று சின்னகுட்டி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com