நெல்லையில் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி டவுண், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவை சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (வயது 19) என்பவர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இசக்கிராஜா, திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன் மற்றும் நெல்லை சந்திப்பு (சட்டம் ஒழுங்கு) போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






