நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி டவுண், சிவா தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வசூர்யா (வயது 18) என்பவர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுக்குமார், திருநெல்வேலி டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு- டவுண் குற்றம்) ஜூடி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று செல்வசூர்யா, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com