14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் அவரது தாய் சிறுமியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து மகளிடம் விசாரித்தார். அப்போது அமுல்ராஜ் (35 வயது) என்பவர் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அமுல்ராஜ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com