

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன் திருவண்ணாமலை மாவட்டம் வேப்பூர்செக்கடியை சேர்ந்த கருப்பன் (வயது 28) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆசைவார்த்தை கூறி அவர் அந்த மாணவியை சாத்தனூர் அணைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வர ஏன் தாமதம் என விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை மாணவி தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் புகார் அளித்தனர். ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பனை கைது செய்தனர்.