சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் கருப்பசாமி (வயது 20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

போக்சோவில் வாலிபர் கைது

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com