நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், குருவன்கோட்டையை சேர்ந்த செல்லப்பா மகன் ராஜநயினார் (வயது 28) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் ராஜநயினார், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com