கஞ்சா வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அப்பகுதியில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
கஞ்சா வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சாம்டேவிட் (வயது 21) என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் சாம்டேவிட்டை நேற்று வடபாகம் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com