கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(எ) போஸ் (வயது 26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சென்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், இசக்கிமுத்து(எ) போஸ், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று (29.11.2025) அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com