கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சேரன்மகாதேவியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த குத்தாலம் மகன் பூர்ணஆனந்த் (வயது 31) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன நபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், பூர்ணஆனந்த் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று (9.12.2025) அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com