கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

ஏர்வாடி பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி மகன் தமிழரசன் (வயது 25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், அந்த வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் தமிழரசன், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com