கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஆவார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடியைச் சேர்ந்த ரோசரி மகன் மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (வயது 27), வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தொடர்புடை குற்றவாளி ஆவார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com