நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பற்பநாதபுரம், தெற்கு தெருவை சேர்ந்த சந்தியாகு இஸ்ரவேல்ராஜ் மகன் அன்பு(எ) அன்பன் (வயது 26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் அன்பு(எ) அன்பன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com