போக்சோ வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், டாணா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
போக்சோ வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், டாணா பகுதியை சேர்ந்த இசக்கி மகன் ஹரிஹரன் (வயது 25) என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின் பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நேற்று மேற்சொன்ன வாலியர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை கருதி, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 45 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com