கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலியில் பாளையங்கோட்டை தாலூகா, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூப்பாண்டி (வயது 25) என்பவர், நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளி"ஆவார்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி நேற்று நாகூப்பாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com