நெல்லையில் பணம் கேட்டு மிரட்டல்: வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை மாநகரம் பேட்டையைச் சேர்ந்த ஒருவரை, டவுண் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வழுக்கோடை பாலம் அருகே பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார்.
நெல்லையில் பணம் கேட்டு மிரட்டல்: வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம், பேட்டை, உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் இசக்கி மகன் சங்கரநாராயணன் என்பவரை திருநெல்வேலி டவுண், பாலகிருஷ்ணன் கிழக்கு தெருவைச் சேர்ந்த கொம்பன் மகன் சபரி (வயது 22) என்பவர் திருநெல்வேலி டவுண், வழுக்கோடை பாலம் அருகே பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார்.

மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சபரி என்பவர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் (மேற்கு), போலீஸ் உதவி கமிஷனர் இளவரசன் (டவுண் சரகம்), திருநெல்வேலி டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி (டவுண் சட்டம் & ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று முன்தினம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com