கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை மாநகரம் பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி, பேட்டை, கலுங்கடி தெருவை சேர்ந்த பெருமாள்(எ) மண்டையன் பெருமாள் மகன் லெட்சுமணன் (வயது 21) என்பவர், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் (மேற்கு), போலீஸ் உதவி கமிஷனர் இளவரசன் (டவுண் சரகம்), போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் (பேட்டை சட்டம் & ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி, லெட்சுமணன் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com