கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

களக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு, ஆவுடைவிலாசம் தெருவை சேர்ந்த ஈனராஜ் மகன் சிவசங்கர் (வயது 20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், சிவசங்கர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று (22.11.2025) அடைக்கப்பட்டார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com