நாங்குநேரியில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது; பைக் பறிமுதல்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாங்குநேரியில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது; பைக் பறிமுதல்
Published on

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடி மாவட்டம், திமையார் காலனியை சேர்ந்த ஜார்ஜ்துரை (வயது 30) என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்னர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜார்ஜ்துரையை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com