வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது30), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், 1 வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. பாலனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து மனைவி சாரதா 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு நர்ஸ் வேலைக்கு சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாலன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com