காதல் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்தவர் நவீன் (வயது 20). இவர், கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடிபோதைக்கு அடிமையான நவீன், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததுடன், காதல் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நதியா, கணவருடன் கோபித்துக்கொண்டு வியாசர்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த நவீன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com