குலசேகரப்பட்டினத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தட்டார்மடம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தில் ஒருவர், புத்தன்தருவை ரோட்டில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரப்பட்டினத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் அருகே உள்ள புதுமனை கோட்டைவிளை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுந்தர் (வயது 25), சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது வீட்டின் அறையில் தூக்குப்பேட்டு தற்கெலை செய்து கெண்டார். இன்று காலை அவரது வீட்டில் உள்ளவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கெலை செய்து கெண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் ஜெயபால் (வயது 53). இவர் நேற்று புத்தன்தருவை ரோட்டில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்குப்பேட்டு தற்கெலை செய்து கெண்டார்.

இதுகுறித்த தகவலின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com