கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.

மூத்த மகன் சிவசங்கரன் (27 வயது) டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சங்கீதா மற்றும் இளைய மகன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டுக்கு வெளியே கட்டிலில் சிவசங்கரன் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது சிவசங்கரனை காணவில்லை. பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டில் பார்த்தபோது, அங்கு கூரையில் சேலையால் தூக்குப்போட்டு சிவசங்கரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சிவசங்கரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சிவசங்கரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com