திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், நாகர்கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மோட்ச தீபம் ஏற்றியதால் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது
Published on

திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி பூர்ணசந்திரன் என்ற வாலிபர் கடந்த 18-ந் தேதி மதுரை தல்லாகுளத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பூர்ணசந்திரனுக்காக நாகர்கோவில் வடசேரியில் அனுமதியின்றி நேற்று மோட்ச தீபம் ஏற்றிய நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் கவுன்சிலர் சுனில்குமார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் பூர்ணசந்திரனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மோட்சதீபம் ஏற்றிய இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com