தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

மதுக்கூர் இந்திராநகர் நித்யாகாலனியில் வசித்து வருபவர் காமராஜ் (வயது48). சமையல்வேலை செய்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பிரகாஷ் (21). சம்பவத்தன்று, தனது சமையல் வேலைக்கு உதவியாக இருக்க வேண்டிய பிரகாஷ் குடித்துவிட்டு வந்ததால் அவரை காமராஜ் கண்டித்தார். இதில் மனமுடைந்த பிரகாஷ் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com