தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

ராணிப்பேட்டை வள்ளலார் நகர் ஈ.வெ.ரா.தெருவை சேர்ந்தவர் விஜயகீர்த்தி. இவரது மகன் சந்தோஷ் (வயது 29). பி.காம். பட்டதாரியான இவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில் வேறு வேலை எதுவும் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த சந்தோஷ், வீட்டில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com