தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ஆரணி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

ஆரணி

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ராஜன். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன் அருண்ராஜ் (வயது 22)

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ராஜன் தற்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு ஏற்று இருப்பதால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அருண்ராஜ் தந்தையிடம் மோட்டார் சைக்கிளையும், போதிய வசதி இல்லாத வீட்டில் இருப்பதாகவும், எனவே புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று பகல் 3 மணி அளவில் ராஜன் செல்போனுக்கு, அருண்ராஜ் செல்போனில் இருந்து என்னை மன்னித்து விடுங்கள், நான் இறக்கப் போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக இரும்பேடு கிராமத்தில் உள்ள உறவினர்களிடம் ராஜன் தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் ராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com