தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

போளூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

போளூர்

போளூர் அருகே மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் பிரகாஷ் தனது வருமானத்தை வைத்து ஊதாரிதனமாக செலவு செய்து வந்தார். இதனை அவரது தாயார் சந்திரா கண்டித்து வந்துள்ளார். நேற்று இதேபோல் கண்டித்துள்ளார்.

இதில் மனவேதனைஅடைந்த பிரகாஷ் மண்டகொளத்தூர் அருகே அரும்பலூர் கிராம ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com