தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகள், பள்ளி மாணவர்கள் விடுதி உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக மாணவர்கள் விடுதி செயல்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை இந்த விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த வாலிபர் திருவண்ணாமலை கல் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் சூர்யா (வயது 17) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்ததும்,  மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com