பேரையூர்
கள்ளிக்குடி தாலுகா தென்னமநல்லூரை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 32). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பணன் அடிக்கடி மது குடிப்பாராம்.இதனால் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

