சாத்தனூர் அணையில் முதலை கடித்து இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு இன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக முனீஸ் (வயது 18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் முகம் கழுவ முனீஸ் சென்றுள்ளார். அப்போது, நீரில் பதுங்கி இருந்த முதலை இளைஞர் முனீசை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது.
இந்த சம்பவத்தில் முனீஸ் உயிரிழந்தார். முனீசை மீட்க அவரது நண்பர்கள் முயற்சித்தபோதும் அவர் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் முனீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






