மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் நெடும்பரம் காலனியில் வசிப்பவர் பன்னீர்செல்வம். இவரது மகன் விசு (வயது 27). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் திருத்தணி பஜார் வீதிக்கு சென்று விட்டு, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

கனகம்மாசத்திரம் அடுத்த ரகுநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்த போது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த விசுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விசுவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி விசு பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த விசுவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com