காரைக்குடி: கட்டுப்பாட்டை இழந்த பைக் சுற்றுச்சுவரில் மோதி வாலிபர் பலி

விஜய சுந்தரின் இழப்பு அவரின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் விஜய சுந்தர் பலியானார்.
விபத்து
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாலிபர் ஒருவர் வந்த பைக் கட்டுப்பட்டை இழந்து சுற்றுச்சுவரில் மோதியதில் அவர் பலியானார்.

விபத்து

ராமநாதபுரம், நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மகன் விஜய சுந்தர் (வயது22). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் அரசு தேர்வுக்காக படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் பைக்கில் கல்லுாரி ரோட்டில் சென்றார்.

அப்போது சுந்தரின் பைக் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் விஜய சுந்தர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். மேலும் அபிஷேக், தமிழ்செல்வன் ஆகியோருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

வாலிபர் உயிரிழப்பு

தகவல் அறிந்த அழகப்பாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த விஜய சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய சுந்தரின் இழப்பு அவரின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com