குடும்பத்தினர் கண்முன்னே இளைஞர் வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

மகனை காப்பாற்ற முயன்ற தாயையும் மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி சென்றுள்ளனர்.
இளைஞர் வெட்டிக்கொலை
Published on: 

சென்னை,

குடும்பத்தினர் கண்முன்னே இளைஞரை வெட்டிக்கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேனி பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 28). இவர் நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்தினரோடு பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 2 பெண்கள் அவரை தனியாக பேசுவதற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற அவரின் தாயாரையும் கத்தியால் தாக்கியுள்ளனர். பின்னர், அந்த 2 பெண்கள் உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அஜித்தின் தாயாரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 2 பெண்கள் உட்பட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை முன்பகை காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com