

சென்னை
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;-
* படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக முப்பத்தி ஆறு மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
* பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
* உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
* அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்; இந்த திட்டம் 52.2 கோடி செலவில் ஒன்றிய - மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
என கூறினார்.