மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

களக்காடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலபத்தை பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் ரேக்லண்ட் (வயது 27) எலக்ட்ரீசியன். இவர் தற்போது களக்காடு கப்பலோட்டிய தமிழன் தெருவில் தனது மனைவி சத்யா (25) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று ரேக்லண்ட் களக்காடு அருகே உள்ள தெற்கு காடுவெட்டியில் ஒரு வீட்டில் பழுதான மின்சார மோட்டாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரேக்லண்ட் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதமன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com