மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
Published on

சோமரசம்பேட்டையை அடுத்த வாசன் சிட்டி 5-வது கிராஸை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவருடைய மகன் முத்துராஜா (வயது 27) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் அரசு வேலைக்காக படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டின் முன்பு மின்விளக்கு அமைப்பதற்காக மின்சார கருவியை பொருத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சோமரசம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com