புதுப்பேட்டை அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் பலி

புதுப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானா.
புதுப்பேட்டை அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தோட்டத்துக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் குளிப்பதற்காக மோட்டார் கொட்டகையில் இருந்த மின்மோட்டார் சுவிட்சை அழுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தம்பி சுதாகர் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com