

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 22), ஏ.சி. மெக்கானிக். இவர் பாளையங்கோட்டையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நெல்லை அருகே கே.டி.சி. நகரை தாண்டி சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.