திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் கொலை:பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய 4 பேர் கைது

திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் கொலை:பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய 4 பேர் கைது
Published on

திருப்பரங்குன்றம், 

வாலிபர் படுகொலை

நெல்லை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 31). இவர் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரெயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணகுமாரை பின் தொடர்ந்து காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கிருஷ்ணகுமாரை வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன்(29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன்(29) என தெரியவந்தது. இவர்கள் கிருஷ்ணகுமாரைகொலை செய்ததாக தெரிவித்தனர்.

.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிராஜ் ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கு சாட்சி சொல்லக் கூடாது என கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்தனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, மது பாரில் இருந்த மாரிராஜை, கிருஷ்ணகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

பழிக்குப்பழி

இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் கிருஷ்ணகுமாரை கொலை செய்ய மாரிராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கருவேலம்பட்டி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணகுமாரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கிருஷ்ணகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com