கோவையில் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள் - ரூ.19,500 அபராதம் விதிப்பு!

வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களை கோவை மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோவையில் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள் -  ரூ.19,500 அபராதம் விதிப்பு!
Published on

கோவை,

கோவை சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி வேகமாக சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இதையடுத்து வீடியோவில் பதிவான வாகன எண்களை வைத்து கோவை மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் இயக்கியது மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சாலையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ. 19,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் கோவை மாநகர காவல்துறையினர் எச்சரித்து, சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com