கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாலிபர் தீக்குளிப்பு

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாலிபர் தீக்குளிப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் கோனேஸ்வரன் (வயது 37). இவருக்கு வான்மதி (28) என்ற மனைவியும் வர்சன் (9) என்ற மகனும், பிரியாங்கா (6) என்ற மகளும் உள்ளனர்.

கோனேஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோனேஸ்வரன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கோனேஸ்வரன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com