கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் பள்ளி மாணவனை மதுபாட்டிலால் குத்திய இளைஞர்

படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்
கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் பள்ளி மாணவனை மதுபாட்டிலால் குத்திய இளைஞர்
Published on

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவசூரியா (வயது 19). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிளஸ்-2 செல்ல உள்ளார்.

அதேவேளை, கஞ்சா விற்பனை செய்து வந்த சிவசூரியா குறித்து மாணவன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்துவந்த சிவசூரியாவை போலீசார் கைது செய்தனர். இதனால், மாணவனுக்கும், சிவசூரியாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி மாணவன் இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சிவசூரியா மற்றும் அவரது நண்பர் லிபின் (23) ஆகியோர் மாணவனை வழிமறித்து தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவசூரியா கீழே கிடந்த மது பாட்டிலை உடைத்து மாணவனை குத்தி விட்டு நண்பருடன் தப்பிச் சென்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசூரியாவை கைது செய்தனர். தலைமறைவான லிபினை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com