

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே சாயர்புரம் கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்குப் போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.