வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

வள்ளியூர் பகுதியில் குற்றமுறு மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு குற்றமுறு மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சீலாத்திகுளத்தை சேர்ந்த வினோத்கண்ணன் (வயது 28) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

அவர் நீதிமன்ற விசாரணைக்கு 5 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், வினோத் கண்ணனுக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன வாலிபரை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com