பெயிண்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர்கள் கைது

பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
பெயிண்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர்கள் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் மேல தெருவை சேர்ந்த பெயிண்டர் அய்யப்பன் (வயது 33). இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சுசீந்திரம் அருகே கற்காடு ரெயில்வே கிராசிங் அருகே சென்ற கொண்டிருந்தனர்.

அப்போது சுசீந்திரம் கற்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), கோட்டார் சபையார்குளத்தை சேர்ந்த அர்ஜுன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து அய்யப்பனை வழிமறித்தனர். பின்னர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரசாந்த், அர்ஜுன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com