காஞ்சிபுரம் அருகே 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை

6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை
Published on

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள அமரம்பாக்கம் கிராமத்தில் லோகேஷ் என்பவர் வீட்டில் தங்கியிருந்த பரத், சீனு ஆகிய 2 இளைஞர்களை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியது.

முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் வெட்டிகொலை செய்யப்பட்டார்களா? அல்லது காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இளைஞர்களை கொன்றுவிட்டு தப்பியவர்களை மணிமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டில் தங்கியிருந்த இளைஞர்களை தேடி வந்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்து அங்கிருந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com