விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற இளைஞர்கள்: அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி

சில தவெக தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டி வந்தனர்.
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற இளைஞர்கள்: அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி
Published on

தஞ்சை,

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அவர்களின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் செங்கிப்பட்டிக்கு வருகை தந்தார். விஜய் வேனில் வருகை தந்த போது, அவரை பார்ப்பதற்காக வழிநெடுக தவெக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

சில தவெக தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டி வந்தனர். ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் பலர் பைக்கில் பின்தொடர்ந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சிலர் விபத்தில் சிக்கினர்.இதில் இளைஞர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தன்னை வாகனத்தில் பின்தொடர வேண்டாம் என்று வேலூர் கூட்டத்தில் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தவெகவினர் விஜய்யை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com