குணா குகையில் 'ரீல்ஸ்' மோகத்தால் அத்துமீறும் இளைஞர்கள் - வனத்துறை அதிரடி நடவடிக்கை

‘குணா குகை’ பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுப்பதற்காக வனத்துறையினர் இரும்பு வேலி அமைத்துள்ளனர்.
குணா குகையில் 'ரீல்ஸ்' மோகத்தால் அத்துமீறும் இளைஞர்கள் - வனத்துறை அதிரடி நடவடிக்கை
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில், வனத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை போன்ற இடங்களில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

அதில் 'பேய்களின் சமையலறை' என்று அழைக்கப்பட்டு வந்த குகை, கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்து 'குணா குகை' என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த குணா குகையில் பாறைகளுக்கு இடையே ஆபத்துகள் நிறைந்த பகுதியில் தவறி விழுந்து இதுவரை சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' மலையாள திரைப்படத்தை பார்த்த பிறகு குணா குகைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பலர் அங்கு சென்று 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதனால் அங்கு எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதனை தடுப்பதற்காக 'குணா குகை' பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுப்பதற்காக வனத்துறையினர் இரும்பு வேலி அமைத்துள்ளனர். இருப்பினும் சில இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தால் நுழைவுக் கம்பியை தாண்டி அத்துமீறி உள்ளே செல்கின்றனர். இது குறித்து புகார் எழுந்த நிலையில், வனத்துறையினர் இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். குணா குகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளில், கூடுதலாக இரும்பு வலைகளும், சில இடங்களில் கூடுதல் கம்பிகளும் இணைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com