சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: யூடியூபர் திவ்யா கைது


சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: யூடியூபர் திவ்யா கைது
x

கோப்புப்படம்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சமூக வலைதள வீடியோக்களில் வித்தியாசமான செய்கைகள் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் பிரபலமானவர் தான் திவ்யா கள்ளச்சி. கார்த்திக் ஐ லவ் யூ.. கார்த்திக் மாமா.. என கார்த்திக் என்ற நபர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பிரபலமானார் இவர்.

இவர் தமிழ் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியிலும் பேசி வந்தார். இவரது வீடியோக்கள் பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்ததை பாசிட்டிவ்வாக கொண்டு, அடுத்தடுத்து வீடியோ போட்டு பிரபலாகி அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா கள்ளச்சி தனது மூன்று நண்பர்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக குழந்தை நல அலுவலர் மீனாட்சி புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான அந்த புகாரில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாகவும், அதனை படம்பிடித்து அதன் மூலம் பணம் திரட்ட முயற்சித்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த நால்வர் மீதும் போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story